தாயிடம் கோபித்துக் கொண்டு கோவை வந்த தேனி சிறுவன் மீட்பு

திருப்பூரில் இருந்து கோவை வடவள்ளிக்கு வந்த சிறுவன் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார். சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாயிடம் கோபித்துக் கொண்டு கோவை வந்த தேனி சிறுவன் மீட்பு
Published on

கோவை,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஹரிஹரன் (வயது 15). இவர் வத்தலகுண்டில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் -ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஹரிஹரன் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியேறி தேனியில் இருந்து திருப்பூருக்கு சென்றார்.

பின்னர் திருப்பூரில் இருந்து கோவை வடவள்ளிக்கு வந்த அவர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார். இதனை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com