என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
புதியம்புத்தூர் அருகே விநாயகர் சிலை திருட்டு
Byமாலை மலர்27 Jun 2022 3:29 PM IST
- புதியம்புத்தூர் அருகே உள்ள சாமி நத்தம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது.
- சிலை திருட்டு குறித்து புதிய முத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் அருகே உள்ள சாமி நத்தம் கிராமத்தில் ஊருக்கு தென்புறம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இக்கோவிலில் வழிபடு பவர்கள் காலையில் சென்று பார்த்த போது கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருடப்பட்டது தெரிய வந்தது .
சிலை திருட்டு குறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் சங்கர், புதியம் புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புதிய முத்தூர் போலீசார் சிலை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
X