search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருங்காடு வனப்பகுதியில் இருந்து செங்கல் சூளைகளுக்கு மண் திருட்டு
    X

    பெருங்காடு வனப்பகுதியில் இருந்து செங்கல் சூளைகளுக்கு மண் திருட்டு

    • காடுகளில் வாழும் வனவிலங்குகள் இடம்பெயர்ந்து ஊருக்குள் வருகின்றன.
    • மண் வளங்களை வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் முற்றிலும் அழியும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெங்காடு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெருங்காடு கிராமத்தை சுற்றியும் அடர்ந்த வனபகுதியாகவும், வனவிலங்குகள் வாழ்விடமாகவும் அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதியில் மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, அத்திமூட்லு, பன்னி அள்ளி, சாஸ்திரமுட்லு, பெருங்காடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு வருடம் முழுவதும் மழைநீர் ஆதாரங்களை கொண்டுள்ளதால் தென்னை, பலா, மா உள்ளிட்ட தோட்டங்கள் உள்ளடக்கிய விவசாய நிலங்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இதனால் வருடம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு வகையான தோட்டப்பயிர்களான தக்காளி, கத்திரி, வெண்டை, பீன்ஸ், முட்டை கோஸ், வெள்ளரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    தற்பொழுது பெருங்காடு வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் சிலநபர்கள் அமைத்து வனப்பகுதிகளிலும் ஓடை பகுதிகளிலும் செம்மண்ணை ஜே.சி.பி மூலமாக வெட்டி எடுத்து காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் காடுகளில் வாழும் வனவிலங்குகள் இடம்பெயர்ந்து ஊருக்குள் வருகின்றன.

    மேலும் மண் வளங்களை வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டு விடும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

    எனவே காடு பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள் அப்புறப்படுத்தப்பட்டு வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வல ர்களும்,பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×