சிதம்பரத்தில் திருட்டு :இளமையாக்கினார் கோவிலில் 2 சிலைகள் கொள்ளை

சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இளமையாக்கினார் கோவில் உள்ளதுதிருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி இரத்தின அம்மையார் சிலையை காணவில்லை..
சிதம்பரம் இளமையா க்கினார் கோவிலில் 2 சிலைகள் மாயமான ரிஷி மண்டபம்.
சிதம்பரம் இளமையா க்கினார் கோவிலில் 2 சிலைகள் மாயமான ரிஷி மண்டபம்.
Published on

கடலூா:

சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த, பிரபலமான சிவ ஸ்தலங்களில் ஒன்றாக இளமையாக்கினார் கோவில் உள்ளது. இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர்             இக்கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. குறிப்பாக சோமன் மண்டபத்தில் உள்ள ரிஷி கோபுரத்தில் சிறிய அளவிலாக சிலைகள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில் ரிஷி கோபுரத்தில் இருந்த திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி இரத்தின அம்மையார் சிலையை காணவில்லை. இது தொடர்பாக இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பழனியப்பன் சிதம்பரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்க்டபெர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com