அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண் மாயம்

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.போலீஸ் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண் மாயம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே தொட்டிபாளையம் (நரவலூர்) தளிகை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 42).கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யா( 30). இவர்கள் குழந்தைகளுடன் அங்கு குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் திவ்யா கடந்த 14-ம் தேதி காலை 8 மணிக்கு தனது மகளிடம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு திவ்யா வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவன் பழனிவேல் மற்றும் உறவினர்கள் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திவ்யாவை தேடி பார்த்தனர் .ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பழனிவேல் வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com