என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூரில் முப்பெரும் விழா
    X

    முப்பெரும் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

    வாசுதேவநல்லூரில் முப்பெரும் விழா

    • வாசுதேவநல்லூர் திருவள்ளுவர் மன்றத்தின் 17 -ஆம் ஆண்டின் தொடக்கவிழா, திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்றத்தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் திருவள்ளுவர் மன்றத்தின் 17 -ஆம் ஆண்டின் தொடக்கவிழா, திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    திருவள்ளுவர் மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் படத்தை ஆசிரியர் வேலுச்சாமி திறந்துவைத்தார். முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நல்லாசிரியர் மோகன சுந்தரம், ஆசிரியர் ராமர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, சரவணன், பாவாணர் கோட்டப் பொறுப்பாளர் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இணை செயலாளர் புலவர் சந்திரன் நினைவு பரிசுகள் வழங்கினார்.பேரூராட்சி மன்றத்தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் பிள்ளை யார்சாமி, நகரச் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், சுமங்கலி கோமதி சங்கர், சாமிநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×