search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு
    X

    டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு

    • இந்த ஆண்டும் மகசூலில் சாதனை படைக்க வேண்டும்.
    • 5.20 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படும். குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இன்னும் ஓரிரு நாட்களில் அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து சேரும்.

    அதன் பிறகு அங்கிருந்து பாசனத்துக்காக காவிரி, கொள்ளிடம் ,கல்லணை கால்வாய், வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

    இதையொட்டி தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    காவிரி நீர் வருவதற்கு முன்பாக கடந்த வாரம் பெய்த மழையை பயன்படுத்தி வயலில் உழவு செய்வது, வரப்புகளை சீரமைப்பது , நாற்றங்கால் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை சாகுபடியில் கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் மகசூலில் சாதனை படைக்க வேண்டும் என்பதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் 3.60 லட்சம் ஏக்கரை விட 5.20 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையங்கள், கிடங்குகள், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விற்பனை செய்து விவசாயிகளுக்கு தேவையான ஆலோ சனைகளை வேளாண்மை துறையினர் வழங்கி வருகின்றனர்.

    இதனால் இந்த ஆண்டும் இலக்கை விஞ்சி குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×