என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பாக்கு விற்ற கடைக்கு சீல்
    X

    விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் போதை பாக்குகள் விற்ற கடைக்கு தாசில்தார் இளவரசன் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.

    போதை பாக்கு விற்ற கடைக்கு சீல்

    • போதை பாக்கு விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ் பாக்கெட், கூல்லிப் பாக்குகள் விற்றது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே தாசில்தார் நடத்திய திடீர் ஆய்வில் போதை பாக்கு– கள் விற்ற கடைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தார். விக்கிரவாண்டி தாலுகா சிந்தாமணியின் சர்வீஸ் சாலையில் உள்ள முருகன் (வயது 47) என்பவரது கடை யில் தாசில்தார் இளவரசன் தலைமையில், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப்-–இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வி.ஏ.ஓ. சண்முகவேலன், உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவி னர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ் பாக்கெட், கூல்லிப் பாக்கு–கள் விற்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைதுசெய்தனர். போதை பாக்குகளை பறிமுதல் செய்து, தாசில்தார் இளவர சன் கடையை பூட்டி சீல்வைத்தார்.

    Next Story
    ×