சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
சட்டசபையில் ஷாநவாஸ் பேச்சு.
சட்டசபையில் ஷாநவாஸ் பேச்சு.
Published on

நாகப்பட்டினம்:

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

அதை வரவேற்று நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சட்டமன்றத்தில் பேசியதாவது, ஒன்றிய அரசின் திட்டம் என்றாலே நாம் கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தரும் நல்ல திட்டங்கள் எதையும் நாம் எதிர்த்ததில்லை என்பதற்கு சேதுக் கால்வாய் திட்டம் ஒரு சான்று. எய்ம்ஸ் இன்னொரு சான்று.

தமிழ்நாட்டிற்கு நிறைய ரயில்கள் விடப்பட வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் தான் கேட்கிறோம். ஆனால் அவர்கள் தான் தர மறுக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக நாகை திருவாரூர் மாவட்டங்கள் ரயில்வேயால் புறக்கணிக்கப்பட்டு, அதன் காரணமாக போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

சேது சமுத்திர திட்டம் நமது கனவுத் திட்டமாகும்.

பழவேற்காடு முதல் தேங்காய்பட்டணம் வரை தமிழரின் கடல் வழி வணிகமும் துறைமுகங்களும் சிறந்து விளங்கியிருந்தன. ஆனால் இப்போது அவை எல்லாம் செயலற்றுப் போய் விட்டன.

வரலாற்றுச் சிற்ப்புமிக்க நாகப்பட்டினம் துறைமுகம் செயலற்றுக் கிடக்கிறது.

எனவே சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்குணம் மிக்கவர்.

அவர் காலத்தில் இது கட்டாயம் நிறைவேறும். விசிக சார்பில் இந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.

இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com