search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் பூக்களின் விலை கணிசமாக உயர்வு
    X

    தஞ்சையில் பூக்களின் விலை கணிசமாக உயர்வு

    • பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
    • பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படும்.

    இதேப்போல் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்வர்.

    வியாபாரிகள் மொத்தமா கவும் பூக்கள் வாங்கி செல்வர்.

    பொதுவாக முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். மேலும் வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    அந்த வகையில் இன்று ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதாலும், நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும் பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனையாகின.

    ஆனால் இன்று கிலோ ரூ.1250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    1100, முல்லை கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ .250, சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    இவற்றின் விலையும் நேற்றைய விட அதிகமாகும்.

    இருந்தாலும் பொதுமக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, இன்று ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி. இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருந்தது.

    இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளன. இருந்தாலும் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளது என்றனர்.

    Next Story
    ×