search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை இடிந்து ஆற்றில் விழுந்தது
    X

    கல்லணை கால்வாய் நடைபாதை தடுப்பு கம்பிகளுடன் ஆற்றில் சரிந்து விழுந்தது.

    தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை இடிந்து ஆற்றில் விழுந்தது

    • இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
    • நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாய் ஆறு ஓடுகிறது. . இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைபாதையில் தினமும் ஏராளமான பொது மக்கள் நடந்து செல்கின்றனர். பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    தற்போது கல்லணை கால்வாய் ஆற்றில் விநாடிக்கு 3221 கன அடி வீதம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் ஆற்றின் இடதுபுற கரையில் நடைபாதை சரிந்து பக்கவாட்டு தடுப்பு கம்பியுடன் ஆற்றில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் யாரும் நடந்து செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில மீட்டர் தூரத்திற்கு நடைபாதை தற்போது மிக குறுகியதாக காட்சியளிக்கிறது. அந்த இடங்களில் பிடிமானம் ஏதும் இல்லாததை கண்டு கொள்ளாமல் சிலர் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் தவறி விழக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே முழுவதுமாக கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து வந்து மண் அரிப்பை சரி செய்து கரையை பலப்படுத்த வேண்டும். நடைபாதையை பலமாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×