search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடி கலெக்டர் ஏற்றினார்
    X

    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தேசியக்கொடி ஏற்றினார்.

    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடி கலெக்டர் ஏற்றினார்

    • குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்.
    • ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    தஞ்சாவூர்:

    நாட்டின் குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண கலரில் பலூன்களை பறக்க விட்டார்.

    தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 69 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவம னையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த பயனாளிகள் 17 பேர், தாட்கோ மூலம் பயன்பெறும் பயனாளிகள் 17 பேர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 11 பேர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என 672 பயனாளிகளுக்கு 5008965 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்த லைவர் முத்துச்செல்வன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், தாசில்தார சக்திவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×