search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
    X

    காத்திருப்பு போராட்டம் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

    • வாய்க்கால் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும்.
    • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும்

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

    விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கராசு, சிவானந்தம், செல்வகுமார், செல்வமேரி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

    பாபநாசம் பேரூராட்சி குப்பைமேட்டில் சமுதாயக்கூடம் கட்டவேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் புதிய கழிவறை கட்ட வேண்டும்.

    வேம்பக்குடி கிராமத்திற்கு விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும், உர தட்டுப்பாட்டை நீக்க கோரியும் அனைத்து கிராமங்களிலும் வாய்க்கால் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் வட்டாட்சியர்

    பூங்கொடி தலைமையிலும் போலீஸ் துணை சூப்பிரண்ட் பூரணி முன்னிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கோரிக்கைகளை அனைத்தும் சம்மந்தப்பட்டதுறைகள் மூலம் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு சுமூக தீர்வுகள் காணப்பட்டது.

    இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் இதர துணை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×