வீட்டில் தூங்கிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர்- பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்

சம்பவத்தன்று இரவு காற்றுக்காக வீட்டில் கதவை திறந்து வைத்து விட்டு அனைவரும் படுத்து தூங்கினர். போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் தூங்கிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர்- பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்
Published on

கோவை:

திருப்பூர் மாவட்டம் மங்களத்தை சேர்ந்தவர் 38 வயது இளம்பெண்.

இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒருமகன் உள்ளார்.

இளம்பெண்ணின் மாமியார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரியில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை மாமியார் தொடர்பு கொண்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் 4 நாட்கள் இங்கு வந்து தங்கி விட்டு செல்லுமாறு அழைத்தார். இதையடுத்த அந்த பெண், தனது கணவர், மகனுடன் கிணத்துக்கடவில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று இரவு காற்றுக்காக வீட்டில் கதவை திறந்து வைத்து விட்டு அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவு அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவர் இளம்பெண்ணின் அருகில் சென்று படுத்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடினார்.

தனது மனைவியின் சத்தம் கேட்டு எழுந்த கணவர் அந்த வாலிபரை விரட்டி சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார். பின்னர் தர்ம அடி கொடுத்து கிணத்துக்கடவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ஜே.சி.பி. ஆபரேட்டர் கார்த்திக் (வயது 26) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com