search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்-அமைச்சர், தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றி வருகிறார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய போது எடுத்தபடம்.

    பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்-அமைச்சர், தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றி வருகிறார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடந்தது.
    • விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரை பாண்டியன் வரவேற்றார்.

    பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள்

    திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரி மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவு யாற்றினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி முன்னாடி மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார். தமிழகத்தை பார்த்து காலை சிற்றுண்டி திட்டம் சில மாநிலங்களில் செயல்பட தொடங்கி விட்டன. வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்ட சத்துகளை வழங்கு வது, கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்குவது, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கியது, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது என பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அத்திட்டங்கள் முறைப்படி பெண்களுக்கு சென்ற டைகிறதா? என்று தனிக் கவனம் செலுத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    காலை உணவுத் திட்டம்

    இதை போல அரசு பள்ளியில் காலை உணவு திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் கல்லூரி வரை சென்று படிப்பதற்கு அரசு உதவித்தொகை இப்படி தமிழக மக்களுக்கு தினசரி ஒரு புது திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு தமிழக மக்களாகிய நாம் என்றும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இதில் உடன்குடி யூனியன் ஆணையாளர்கள் ஜான்சி ராணி, சுடலை, உடன்குடி பேரூராட்சி செயல் அலுவ லர் பிரபா, உடன்குடி பேரூ ராட்சி தலைவர் ஹீமைரா ரமீஸ் பாத்திமா, உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீரா சிராசுதின், உடன்குடி பேரூ ராட்சி துணைத் தலைவர் மால் ராஜேஷ், பேரூராட்சி கவுன்சி லர்கள் ஜான் பாஸ்கர், மும்தாஜ் பேகம், அன்பு ராணி, சர ஸ்வதி பங்காளன், பாலாஜி, ஆபித், பஷீர், பிரதிப் கண்ணன், சபானா, ராஜே ந்திரன், மாநில தி.மு.க., வர்த்தக அணி இணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. அமிர்தராஜ், மாநில காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன், மூத்த தலைவர் வெற்றிவேல், ஜெயராமன், தி.மு.க. கிளைச் செயலாளர் முகமது சலீம், தங்கம், முருகன். முகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வை யாளர் மலர்கொடி சுகிர்தா நன்றி கூறினார்.

    Next Story
    ×