search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்ற வேண்டும்- புகார் மனு
    X

    சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்ற வேண்டும்- புகார் மனு

    • மரங்களை அகற்றி விட்டு சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது பற்றி அந்த நபரிடம் கேட்டால் எங்களை மிரட்டுகிறார்.
    • இது பற்றி நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட வள்ளுவர் நகர், அவ்வை பகுதிக்கு செல்லும் சாலையில் வசித்து வருபவர்கள் மருதாசம், சுகுணா, செல்வம், சின்னபொன்னு, ஆனந்தகுமார் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    இந்த பகுதியில் உள்ள வீடுகள் தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் ஒதுக்கப்பட்ட 20 அடி சாலைக்கு வடக்குபுறம் அமைந்துள்ளது.

    அந்த 20 அடி சாலைக்கு தெற்கில் வீட்டுவசதி வாரியத்தால் மற்றொரு 30 அடி சாலையை ஒதுக்கியுள்ளனர். அந்த சாலைக்கு இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக நீதிமன்றம், சிப்காட் செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளது.

    இந்த பகுதி சாலையோரம் உள்ள மரங்களை அகற்றி விட்டு சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது பற்றி அந்த நபரிடம் கேட்டால் எங்களை மிரட்டுகிறார்.

    இது பற்றி நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    இதனால் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். மேலும் இதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.

    Next Story
    ×