பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

தஞ்சையில் வரதட்சணை கொடுமையில் கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்:

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், சாந்தி நகரை சேர்ந்தவர் காதர்கான் (வயது 30). 

இவர் கரூர் டி.என்.பி.எல். நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். 

இவருக்கும் தஞ்சை கீழவாசல் எஸ்.என்.எம்.ரகுமான் நகரை சேர்ந்த 

ஹாசன்சாஸ்ரீஸ் (25) என்பவருக்கும்  கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் காதர்கான் மட்டும் 

கரூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். 

இதனால் ஹாசன்சாஸ்ரீஸ் தஞ்சையில் உள்ள தனது 

பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் காதர்கான், அவரது தந்தை அஜீஸ்கான், தாயார் டைனோர்நிசா,  தங்கை ஜெமிலாசகிலா ஆகியோர் அடிக்கடி பணம், 

நகை கேட்டு ஹாசன்சாஸ்ரீசை வரதட்சணை 

கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தஞ்சை அனைத்து மகளிர் 

போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார்  காதர்கான், அஜீஸ்கான், 

டைனோர்நிசா, ஜெமிலாசகிலா ஆகிய 4 பேர் மீதும் 

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com