என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உலக மிதிவண்டி தின பேரணி
  X

  உலக மிதிவண்டி தின பேரணியை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

  உலக மிதிவண்டி தின பேரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மருதுபாண்டியர் கல்லூரி, பாரத் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த சுமார் 100 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
  • சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி அந்தோணிஅதிர்ஷ்டராஜ் மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்.

  தஞ்சாவூர்:

  உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து ஐ.டி.ஐ மைதானம் வரை மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

  இதனை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்செல்வம் கொடியசைத்து துவங்கி வைத்தார். விழாவில் பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபிரபா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி அந்தோணிஅதிர்ஷ்டராஜ் மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்.

  பேரணியில் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி, பாரத் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த சுமார் 100 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  விழாவிற்கான ஏற்பாடு–களை தஞ்சாவூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு அலுவலரும் மருதுபாண்டியர் கல்லூரி பேராசிரியருமான சந்தோஷ்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள்கணேஷ், முருகானந்தம், ராமச்சந்திரன்ஆகியோர் செய்திருந்தனர்.

  Next Story
  ×