கோட்டிப்பிரகாச ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

வடுவூர் அடுத்துள்ள மூர்த்தி அம்பாள்புரம் கோட்டிப்பிரகாச ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்
கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் வடுவூர் அடுத்துள்ள மூர்த்தி அம்பாள்புரத்தில் ஸ்ரீ கோட்டிப்பிரகாச ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலை பூஜை காஞ்சிபுரம் மகா பெரியவர் ஆசியுடன் சங்கர் சிவாச்சாரியார்,  சுரேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில்  மகாகணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, மகா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் என யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று கடம் புறப்பட்டு 10 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி ,ஓம்சக்தி என்று பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். பின்னர் கோட்டிப்  பிரகாச ஈஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ,ஆராதனைகள், அலங்காரம், செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை செய்து வழிபாடுகள் நடைபெற்றது.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதபை மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டன. கும்பாபிஷேகத்தை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் சவுந்தரராஜன் ,செயலாளர் ரவி, பொருளாளர் ராமலிங்கம், மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com