குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

சேதுபாவாசத்திரம் அருகே குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆழ்துளை கிணறு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு.
ஆழ்துளை கிணறு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு.
Published on

பேராவூரணி:

தஞ்சை மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய பகுதியான பெத்தனாட்சிவயலில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சுமார் ரூ.6.31 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு, மோட்டார் வசதியுடன், நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு 

ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பள்ளத்தூர், இரண்டாம் புளிக்காடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கூடுதல் கலெக்டர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, பயிற்சி கலெக்டர் கவுசிக், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர், ரூ.24.77 லட்சத்தில் மனோராவில், அரசு அலுவலர் பயிற்சி மையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது பேராவூரணி தாசில்தார் சுகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் முருகேசன், ஒன்றிய மேற்பார்வையாளர் சுப்ரதீபபிரபு, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com