பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேங்காய் உடைக்கும் போட்டி
பேராவூரணி:
பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு தேங்காய் உருட்டும் போது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காயை வைத்து உருட்டி அதனை நேருக்கு நேர் மோத விடுவார்கள்.
அந்த மோதலில் உடைய தேங்காய் மூடி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். போரிக்காய் எனப்படும் இந்த மோதல் தேங்காயை ரூ.200 முதல் 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து கொன்றைக்காடு இளைஞர்கள் கூறியதாவது:-
இது எங்களின் சந்தோஷத் துக்காக பொங்கல் தினத்தை ஒட்டி ஒரு நாள் மட்டும் நடத்தப்படும் விளையாட்டு. இந்த போட்டியில் யாருக்கும் எந்த ஆபத்தும் இருக்காது.
இந்த போரிக்காய் விளையாட்டிற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பல்வேறு கிராமங்களில் அலைந்து திரிந்து தேங்காய்களை வாங்கி சேர்த்தோம்.
கஜா புயலில் தென்னை மரங்கள் விழுந்து விட்டதால் இந்த வகையான தேங்காய்கள் கிடைப்பது அரிதாகி விட்டது என்று
தெரிவித்தனர்.

