தஞ்சையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து வந்த 4 பேர் கைது

தஞ்சையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீடுகளில் கொள்ளை அடித்த கும்பலை சேர்ந்தவர்கள்.
வீடுகளில் கொள்ளை அடித்த கும்பலை சேர்ந்தவர்கள்.
Published on

பட்டீஸ்வரம்:

தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவின் படி தஞ்சை தனிப்படை சப்&இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  மோகன், ஏட்டு உமாசங்கர் மற்றும் போலீஸ்காரர்கள் கௌதம், அருண்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் தஞ்சை டவுன் மற்றும் புறப்பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை தனிப்படை போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் நான்கு மாதங்களாக தஞ்சை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி உள்ள சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படி உள்ளதாக தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் தஞ்சை தனிப்படை போலீசார் உடனடியாக அந்த வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்று தங்களுடைய முதற் கட்ட விசாரணையை தொடங்கினார்கள்.

அதில் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தது தந்தது தஞ்சை மாவட்டம் நெடார் பகுதியை சொட்டை தியாகராஜன் (55) என்பதும் அதில் தங்கி இருந்தது அவனது கூட்டாளியான தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கொடுங்கசாமி (55) என்பதும் தெரிய வந்தது.

அங்கு சென்று போலீசார் பார்த்த போது வீடு பூட்டி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் நெடாரில் வசித்து வரும் சொட்டை தியாகராஜனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தது நாங்கள் தான். இங்கு தங்கிக் கொண்டு சுற்றி உள்ள பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளில் கொள்ளை அடிப்போம். 

இக்கொள்ளை சம்பவத்திற்கு எல்லாம் மூளையாக செயல் பட்டவன் கொடுங்கசாமி என்பதும் தெரிய வந்தது, மேலும் இவன் மீது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவர்களின் நண்பர்களான கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த மோகன் குமார் (39) மீது சுமார் பத்து வழக்குகளும், திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்த பூனை நாகராஜன் (49) மீது சுமார் பத்து வழக்குகளும் உள்ளன என்பதும்.

இந்த நால்வரும் சேர்ந்து தான் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடு பட்டு வந்துள்ளதும், சில மாதங்களாக தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் பூட்டி இருந்த 15 வீடுகளில் கொள்ளை அடித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

தப்பி ஓடிய கொடுங்கசாமி மற்றும் அவனது நண்பன் மோகன் ஆகிய இருவரும் கர்நாடகா மாநிலம் மைசூர் அருகில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் தஞ்சை தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. 

உடனை அந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். திருச்சியில் பதுங்கி இருந்த பூனை நாகராஜூவையும் கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 50 பவுன் நகைகளும், 1 கிலோ வெள்ளி பொருள்களும், 5 லட்சம் ரொக்கமும் கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com