search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம்
    X

    தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம்

    • தெரு நாய், குதிரை, பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
    • ஸ்டெம் பூங்காவில் நுழைவு கட்டணம் குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் , துணை மேயர் , கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டதற்காக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு மாநகராட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நேற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்ததற்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, கலையரசன் ஆகியோர் கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்காக முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    கேசவன் :

    30-வது வார்டில் தார் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தெரு நாய், குதிரை , பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும். மழைக்காலம் வருவதால் வடிகால்ல் வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும்.

    காந்திமதி :

    கொண்டிராஜபாளையம் தற்காலிக மீன் மார்க்கெட்டை நிறம் மாற்றக்கோரி தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே உடனடியாக மீன் மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

    சரவணன்:

    சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளது.

    போதிய குப்பை பெட்டிகள் இல்லாததால் கோழி, மீன், இறைச்சி கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன.

    இதனை தடுக்க வேண்டும்.

    ஸ்டெல்லா நேசமணி:

    எனது வார்டில் புதிதாக அங்கன்வாடி, கழிவறைகள் திறக்கப்பட்டதற்கு நன்றி.

    கோபால் :

    4 ராஜவீதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி:

    பெண் கவுன்சிலர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர்.

    அதனால் பெண் கவுன்சிலர் என்பதால் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற பெண் கவுன்சிலர் ஒருவரின் குற்றசாட்டை ஏற்க முடியாது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகளை திறந்து வைத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது வார்டில் ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்:

    புதிதாக திறக்கப்பட்ட ஸ்டெம் பூங்காவில் நுழைவு கட்டணம் குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

    இதுவரை இணைப்பு வழங்கப்படாத வணிக வளாகத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் சண் .ராமநாதன் கூறும்போது:-

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சையில் நேற்று முதல் -அமைச்சரால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த பணிகள் திறந்து வைக்கப்பட்டது.

    இதில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட பல்நோக்கு மாநாட்டு அரங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதேபோல் பழைய திருவையாறு பஸ் நிலைய வணிக வளாகத்திற்கு கலைஞர் முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என்றும், சரபோஜி மார்க்கெட் முன்பாக புதிதாக கட்டப்பட்ட வரும் வணிக வளாகத்திற்கு பேரறிஞர் அண்ணா வணிக வளாகம் என்றும், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதற்கான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×