search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மையை பராமரிப்பதில் சிறந்து விளங்கிறது-ரஷ்ய கலைஞர்கள் பாராட்டு
    X

    ரஷ்ய கலைஞர்கள், மேயர்-ஆணையரிடம் போட்டோ எடுத்து கொண்டனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மையை பராமரிப்பதில் சிறந்து விளங்கிறது-ரஷ்ய கலைஞர்கள் பாராட்டு

    • கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்கு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
    • குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    ரஷ்யா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் 15 பேர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்தியா- ரஷ்யா வர்த்தக சபை அழைப்பின் பேரில் இக்குழுவினர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்கு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி ரஷ்ய கலைஞர்கள் குழு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கலைநிகழ்ச்சிகளை முடித்து விட்டு தஞ்சாவூருக்கு வந்தனர். தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு மாலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்களை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர் ரஷ்ய கலைஞர்கள் மாநகராட்சி கூட்டம் நடைபெறும் அரங்கை பார்வையிட்டனர். அவர்களுக்கு கூட்டம் நடைபெறும் விதம் குறித்து மேயரும், ஆணையரும் எடுத்துக் கூறினர்.

    இதையடுத்து மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள செல்பி பாயிண்ட்டில் அவர்கள் செல்பி எடுத்த மகிழ்ந்தனர்.

    அப்போது தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மையை பராமரிப்பதில் முன்னோடியாக விளங்குகிறது. மாநகராட்சி சுத்தமாகவும், அழகாகவும் உள்ளது. தூய்மையை பராமரிப்பதில் சிறந்து விளங்குவதாக பாராட்டினர்.

    மேலும் மாநகராட்சி செயல்படும் விதம் குறித்தும் பெருமிதம் கொண்டனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பையின் உபயோகம் குறித்தும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்தும்
    விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து ரஷ்யா நாட்டின் பாரம்பரிய நடனங்களை ஆடினர். பின்னர்தமிழ் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடினர். குறிப்பாக விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் இடம் பிடித்த ரஞ்சிதமே என்ற பாடலுக்கு திரைப்படத்தில் வருவது போன்று நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

    தொடர்ந்து பல்வேறு பாடல்களுக்கு ஆரவாரமாக நடனம் ஆடினர். முடிவில் ரஷ்யா கலைஞர்கள் அனைவருக்கும் மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×