தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளை நாளை காலை 7 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு

தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளை நாளை காலை 7 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடந்த 19-ந்தேதி தேர்தல் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பம் செய்த 1,532 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 அதனை முறையாக பூர்த்தி செய்து நாளை காலை 7 மணிக்குள் தேர்தல் அலுவலரிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com