

புளியங்குடி:
தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை, பொது நூலக துறை, அப்துல்கலாம் பொது நல சேவை அமைப்பு ஆகியவை இணைந்து புளியங்குடியில் உலக புத்தக தின விழாவை நடத்தியது.
நகராட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
அப்துல்கலாம் அமைப்பின் தலைவர் சின்னராஜ், வட்டார கல்வி அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புளியங்குடி நூலகர் முத்து மாணிக்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், நகராட்சி கமிஷனர் குமார் சிங் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக தினம் கொண்டாடுவதன் நோக்கத்தையும், அவசியத்தையும் விளக்கி கூறினர்.
மேலும் புத்தக தின விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
முன்னதாக அரசு நூலகத்தில் இருந்து நகராட்சி பள்ளி வரை மாணவர்கள் புத்தக தின விழாவை ஒட்டி விழிப்புணவு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.