கடையத்தில் தேன் கூடுகளை சேதப்படுத்திய கரடிகள்

கடையம் அருகேயுள்ள வெய்க்காலிப்பட்டி பகுதியிலுள்ள தோப்புகளில் கரடிகள் புகுந்து 20 தேன் கூடுகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளது.
கரடிகள் சேதப்படுத்திய தேன் கூடு
கரடிகள் சேதப்படுத்திய தேன் கூடு
Published on

கடையம்:

கடையம் அருகேயுள்ள வெய்க்காலிப்பட்டி பகுதியிலுள்ள தோப்புகளில் கரடிகள் புகுந்து 20 தேன் கூடுகளை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த 6 தேன் கூடுகளையும், டொமினிக் என்பவரது தோட்டத்தில் 12 தேன் கூடுகளையும், கண்ணன் என்பவரது தோட்டத்தில் 2 தேன் கூடுகளையும் சேதப்படுத்தி உள்ளது.

தேன் கூட்டினையும், தேனையும் சேதப்படுத்தி சென்ற கரடிகளால் விவசாயிகள் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கரடிகளால் சேதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் கரடி நடமாட்டத்தை தடுக்க எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com