செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கருப்பு சட்டையுடன் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள்

செங்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கருப்பு சட்டையுடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள்.
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர சபை தலைவர் ராமலெட்சுமி தலைமையில், துணை தலைவர் நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலை மேலாளர் (பொறுப்பு) கண்ணன் வாசித்தார்.

அரசால் அமைக்கப்பட்ட சொத்து வரி சீராய்வு செய்வதற்கான குழு பல்வேறு காரணங்களை ஆராய்ந்து தற்போது சொத்துவரி சீராய்வு செய்வது அவசியம் என மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் கருப்புச்சட்டையும், பெண்கள் கருப்பு சேலையும் அணிந்து வந்தனர். தலைவர் ராமலெட்சமி, துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன் ஆகியோரும் கருப்பு சட்டை, பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

 அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஜெகன், சுப்பிரமணியன், சுடர்ஒளி, ராதா, சரஸ்வதி, சுகந்தி, இந்துமதி, முத்துப்--பாண்டி, பா.ஜனதா உறுப்பினர்கள் வேம்பு ராஜ், செண்பகராஜ், ராம்குமார் ஆகியோர் வரி விதிப்பு உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் ரஹீம், பேபிரெசவு பாத்திமா இசக்கியம்மாள், மேரி, தி.மு.க. ஆதரவு இசக்கி துரைபாண்டியன் ஆகியோர் வரி உயர்வு கட்டாயம் சீரமைக்க வேண்டும். அப்போது தான் நகராட்சிக்கு சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணி திட்டங்-களுக்கும், புதிய திட்டங்-களுக்கு அரசு நிதி வழங்கும்.

 மேலும் நகராட்சியில் போதிய வருவாய் இல்லை. நகராட்சிக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் திட்டபணி பணிகள் செய்வதில் தாமதம் ஏற்படும் என்று கூறினார்கள்.

 இதற்கு அ.தி.மு.க., பா.ஜ. கட்சி உறுப்பினர்கள் வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரி உயர்வு செய்யும் தீர்மானத்தை ஒத்தி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com