தென்காசி மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் தற்கொலை

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

ஆய்க்குடி அழகுநாச்சியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவருக்கு தீராத மூட்டுவலி இருந்து வந்தாக கூறப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் கடந்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆறுமுகம் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

சிவகிரி அருகே உள்ள இனாம்கோவில்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் மாடசாமி மனைவி முத்துமாரி (37) இவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் தீக்குளித்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

 வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அழகம்மாள் (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.

முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து சமீபத்தில்தான் ஊர் திரும்பியுள்ளார். அவரிடம் அழகம்மாள் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அழகம்மாள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com