அழுக்கு சித்தர் சுவாமிகள் பீடத்தில் வருசாபிஷேகம்

சிவகிரி அழுக்கு சித்தர் சுவாமிகள் பீடத்தில் தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் வருசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 18 வகையான நறுமணப் பொருட்களை கொண்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
வருசாபிஷேக விழா நடந்த காட்சி.
வருசாபிஷேக விழா நடந்த காட்சி.
Published on

சிவகிரி:

சிவகிரி அழுக்கு சித்தர் சுவாமிகள் பீடத்தில் தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் இருந்து புனித தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டு வருசாபிஷேகம் நடைபெற்றது.

சித்தர் சுவாமிகள் பீடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர் மற்றும் 18 வகையான நறுமணப் பொருட்களை கொண்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 

பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி குமார், கருப்பாயி, வெங்கடேஷ், முருகேசன், ராமராஜ், சித்ரா, நல்லசிவன், அழகுராஜா, காசிராஜன், காமாட்சி, வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் வீரலட்சுமி குருசாமி பாண்டியன், மருது பாண்டியன், கருணை யானந்த சித்தர் பீடத்தின் பூசாரி, சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com