தோஷம் இருப்பதாக கூறி மாணவியிடம் பாலியல் சீண்டல்- கோவில் பூசாரி கைது

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி சந்திரசேகர் தப்பி ஓடி தலைமறைவானார்.தலைமறைவாக இருந்து வந்த பூசாரி சந்திரசேகர் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தோஷம் இருப்பதாக கூறி மாணவியிடம் பாலியல் சீண்டல்- கோவில் பூசாரி கைது
Published on

அண்ணாநகர்:

மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கோவில் பூசாரியான இவர் 15 வயது பள்ளி மாணவிக்கு தோஷம் இருப்பதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

தனது வீட்டில் தங்கி இருக்க சொல்லி தோஷம் கழிக்க சுற்றி போட வேண்டும் என்று கூறியுள்ள சந்திரசேகர் மாணவியிடம் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கும் போடப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி சந்திரசேகர் தப்பி ஓடி தலைமறைவானார்.

தலைமறைவாக இருந்து வந்த பூசாரி சந்திரசேகர் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பூசாரி சந்திரசேகர் இதுபோன்று வேறு ஏதேனும் சிறுமிகள், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com