தீபாவளி பண்டிகை நாளில் மதுவிருந்துக்கு பணம் இல்லாததால் வாலிபர் தற்கொலை

நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை மது விருந்துடன் கொண்டாட சின்னா திட்டமிட்டார். மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாளில் மதுவிருந்துக்கு பணம் இல்லாததால் வாலிபர் தற்கொலை
Published on

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு அடுத்த புலிக்குன்றம் காந்தலூரை சேர்ந்தவர் சின்னா(வயது28). வெல்டரான இவர் மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியில் உள்ள மாமா வீட்டில் தங்கியிருந்து பூஞ்சேரியில் வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை மது விருந்துடன் கொண்டாட சின்னா திட்டமிட்டார்.

ஆனால் அவரிடம் போதிய அளவு பணம் இல்லை. இதைத்தொடர்ந்து சின்னா தனது மாமாவிடம் பணம்கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்க வில்லை. இதனால் சின்ன மனம் உடைந்தார். இந்த நிலையில் சின்னா அப்பகுதியில் உள்ள பாலாறு குட்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com