கஞ்சா விற்ற வாலிபர் கைது

நன்னிலம்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அங்கு சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

திருவாரூர்:

நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருக்கண்டீஸ்வரம் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், நன்னிலம் பகுதியை சேர்ந்த கோவிந்தவேல் (வயது 23) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தவேலை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com