பொள்ளாச்சியில் இளம்பெண் தற்கொலை

இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பொள்ளாச்சியில் இளம்பெண் தற்கொலை
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மனைவி மேனகா (வயது 22). இவர் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மேனகா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார்.

சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மேனகா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு ெதாங்கினார்.

மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த விமல்ராஜ் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு மேனகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளிலேயே மேனகா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com