கோவையில் இளம்பெண் தற்கொலை

திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில்  இளம்பெண் தற்கொலை
Published on

கோவை,

கோவை தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரெஜிதா(28). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மனவேதனை அடைந்த ரெஜிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி பூம்புகார் நகரை சேர்ந்தவர் சரவணகுமார்(24). தொழிலாளி. இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com