காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.காவிரி கரையில் உள்ள ரத்தினபுரனேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்து சென்றனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடலில் காவிரி கலக்கும் சங்கமுக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரி சங்கமத்தில் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி சங்கமத்தில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த மூன்று அமாவாசைகளில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதாவது ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

மஹாளய அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வருகின்றனர். காவிரி கரையில் உள்ள ரத்தினபுரனேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com