search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி
    X

    தஞ்சை பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

    • ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார்.
    • அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார். அப்போது அந்த நபர் ஆன்லைன் வேலையில் உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுப்போம்.

    அதனை நீங்கள் சரியாக செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் நாங்கள் இரண்டு மடங்காக பணம் செலுத்திக் கொண்டே இருப்போம். இதற்காக குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என ஆசைவார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் பல தவணைகளாக அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்து 74 செலுத்தி யுள்ளார். ஆனால் கூறியபடி வங்கி கணக்கில் பணம் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் டெலிகிராம் ஆன்லைன் செயலியில் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

    அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார்.

    இது குறித்து அப்பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திர் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×