search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச அபாக்காஸ் ஒலிம்பியாட் போட்டியில் தஞ்சை மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று சாதனை
    X

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கல்.

    சர்வதேச அபாக்காஸ் ஒலிம்பியாட் போட்டியில் தஞ்சை மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று சாதனை

    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் பங்கு பெற்று, சாம்பியன் ஆப் சாம்பியன், செஞ்சுரியன் மற்றும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பாராட்டி பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    தஞ்சாவூர்:

    மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரைனிபாப்ஸ் சர்வதேச அபாக்கஸ் பயிற்சி நிறுவனம் நடத்திய சர்வதேச அபாக்காஸ் ஒலிம்பியாட் போட்டியில் 15 உலக நாடுகளில் உள்ள 3 முதல் 14 வயது வரை உள்ள மாணவ-மாணவிகள் 1400 பேர் கலந்து கொண்டனர்.

    அதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் பங்கு பெற்று, சாம்பியன் ஆப் சாம்பியன், செஞ்சுரியன் மற்றும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தஞ்சை மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பாராட்டி பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் .

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பிரைனிபாப்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவு தலைவர் ஜோதிபாசு மற்றும் தஞ்சை கரந்தை கிளை நிறுவனர் யோகேஸ்வரி செய்திருந்தனர்.

    Next Story
    ×