திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

தந்தை இறந்த நிலையில், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என விஜயக்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.விஜயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Published on

நாமக்கல்:

நாமக்கல் போதுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் விஜயக்குமார் (வயது 29). தொழிலாளி.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கந்தசாமி இறந்து விட்டார். விஜயக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தந்தை இறந்த நிலையில், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர், நேற்று இரவு திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com