search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கைதான கார்த்திக்கேயன்.

    ஓமலூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது

    • ரேஷன் அரிசியை குடோனில் பதுக்கி வைத்து அது கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்க இருந்தது தெரிய வந்தது.
    • சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள ஆட்டுக்காரனூர் கிராமம் முத்து குமரேசன் என்பவரின் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சேலம் கிச்சிப்பாளையம் சிதம்பரபிள்ளை காடு பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரது மகன் கார்த்திகேயன் என்ற மைனா கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

    அப்போது ரேஷன் அரிசியை குடோனில் பதுக்கி வைத்து அது கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்க இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×