கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபர் கைது

சந்தேகத்திற்கு இடமாக திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். வாலிபரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபர் கைது
Published on

மண்ணச்சநல்லூர்:

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் தசரதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் லால்குடி அருகே தாளக்குடி முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முருகானந்தம் (வயது 24) என்பதும் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com