திருமணமான 4 மாதத்தில் காதல் கணவர் மீது பெண் போலீசில் புகார்

கணவரிடம் இருந்து தனது வங்கி புத்தகம், ஏ.டி.எம். கார்டு மற்றும் முக்கிய ஆவணங்களை பெற்று தரும்படி எழும்பூர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
புகார்
புகார்
Published on

சென்னை:

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலரான பிரியங்கா வசித்து வருகிறார்.

23 வயதான இவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரக்கூடிய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அஜித் வயது 24 என்ற வாலிபரை காதலித்தார். இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

அஜித் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை என்பது பிரியங்காவுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து பெண் போலீஸ் பிரியங்கா, தற்போது காதல் கணவன் அஜித்திடம் இருந்து தனது வங்கி புத்தகம், ஏ.டி.எம். கார்டு மற்றும் முக்கிய ஆவணங்களை பெற்று தரும்படி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com