

வள்ளியூர்:
வீடுகட்டும் போது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது வழக்கம்.அதில் மற்றவர்களின் கண்பார்வை பதியும் போது திருஷ்டி ஏற்பட்டு விடும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை.
திருஷ்டி போவதற்கு வீட்டில் தும்பை, துளசி, மணிபிளாண்ட், வெற்றிலை, அருகம்புல் போன்ற செடிகளை தற்போது அதிகமானோர் வளர்த்து வருகின்றனர். ஆனால் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தற்போது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தனக்கு சொந்தமான இடத்தில் தற்போது வீடு கட்டி வருகிறார்.
இதனால் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் திருஷ்டி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சற்று வித்தியாசமாக டிக்-டாக் பிரபலம் ஜி.பி.முத்துவின் புகைப்படத்துடன்‘மூஞ்சியையும் முகரையும் பாரு’ என்ற வாசகம் பதித்த டிஜிட்டல் போர்டு வைத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பொதுமக்கள்மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்து விட்டு சிலர் சிரித்துக் கொண்டே கடந்து செல்கின்றனர்.
இதையும் படியுங்கள்...மதுரையின் சாயலை கைலாசாவில் உருவாக்கி சித்திரை திருவிழா கொண்டாடும் நித்யானந்தா