என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடபழனியில் எலக்ட்ரீசியன் மர்ம மரணம்- அடித்து கொலை செய்யப்பட்டாரா?
- போலீசார் விரைந்து சென்று ஜேம்ஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை வடபழனி, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது63) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று காலை 8 மணி அளவில் அதே பகுதி பெரியார் பாதையில் உள்ள ஒரு அலுமினியம் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜேம்ஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தலையில் அடிபட்டு காயங்களுடன் இறந்து கிடந்த ஜேம்சை மது போதையில் ஏற்பட்ட தகராறில் யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






