ஊத்துக்கோட்டை அருகே கியாஸ் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- சென்னைகல்லூரி மாணவர் பலி

சிகிச்சை பலனின்றி முகம்மது கபீர் பரிதாபமாக இறந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே கியாஸ் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- சென்னைகல்லூரி மாணவர் பலி
Published on

ஊத்துக்கோட்டை:

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகம்மது கபீர்(வயது 18). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடன் படிக்கு வியாசர்பாடியை சேர்ந்த மதன் (18). முகில் (18) ஆகியோருடன் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள கோனே நீர் வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமம் வழியாக சென்றபோது முன்னால் சென்ற கியாஸ்டேங்கர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பக்கவாட்டில் உரசியது.

இதில் முகம்மது கபீர் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் . அவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முகம்மது கபீர் பரிதாபமாக இறந்தார். மதன், முகில் ஆகிய 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com