புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு

காணும் பொங்கலை முன்னிட்டு பாரிவேட்டை திருவிழாவுக்கு நடைபெற்றது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு பாரிவேட்டை திருவிழாவுக்கு நடைபெற்றது. இந்த விழாவில் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனோஜ் (23) என்பவர் வந்து இருந்தார்.

இவருக்கு கடந்த ஒருமாதத்துக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. இந்த நிலையில் விழாவின் போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் சிலர் வேகமாக கூச்சலிட்டவாறு ரகளையில் ஈடுபட்டனர். இதனை மனோஜ் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனோஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதல் பலத்த காயம் அடைந்த மனோஜிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com