திருத்தணி அருகே அரசு பஸ் மீது லாரி மோதல்- 20 பயணிகள் படுகாயம்

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.விபத்தால் அப்குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி அருகே அரசு பஸ் மீது லாரி மோதல்- 20 பயணிகள் படுகாயம்
Published on

திருத்தணி:

திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி இன்று காலை அரசு பஸ்(எண்97) சென்று கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லக்ஷ்மபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் பின்பகுதி முழுவதும் நசுங்கியது. சுமார் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்ததும் கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தால் அப்குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com