திருப்பூர் அருகே விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை

போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அருகே விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை
Published on

மங்கலம்:

தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு சென்ற ஜெகன் திடீரென தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர்கள் ஜெகன் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மயக்கமடைந்த நிலையில் கிடந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜெகன் இறந்தார்.

இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக ஜெகன் விஷ மாத்திரைைய சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com