என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுக்குன்றத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து பணம், துணி திருட்டு
    X

    திருக்கழுக்குன்றத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து பணம், துணி திருட்டு

    • கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பகுதியில் இருந்த சிமெண்டு சீட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீஸ் நிலையம் அருகே உள்ள கடையில் கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    திருக்கழுக்குன்றம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38). இவர் திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் சாலை பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பகுதியில் இருந்த சிமெண்டு சீட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பேண்ட், சார்ட் போன்ற ரூ.1 லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.37 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து பாலாஜி திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே உள்ள கடையில் கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×