தோகைமலை அருகே நள்ளிரவில் கொத்தனார் சரமாரியாக வெட்டி கொலை

நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை அருகே நள்ளிரவில் கொத்தனார் சரமாரியாக வெட்டி கொலை
Published on

குளித்தலை:

கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி பகுதியான கல்லடைையை சேர்ந்தவர மருதை. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் கொத்தனார் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டது என செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் பெட்ரோல் வாங்க அவரை நண்பர்கள் நள்ளிரவில் அழைத்துள்ளனர். அப்போது அவருடைய மனைவி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்? நள்ளிரவு வெளியே போகக்கூடாது என கூறினார்.

இருந்த போதிலும் மனைவி சொல்லை கேட்காமல், பெட்ரோல் வாங்க வெளியே தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் கைகாட்டி பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

முன்விரோதத்தில் பெட்ரோல் வாங்க வேண்டும் என்று பொய் சொல்லி அழைத்து நண்பர்களே அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மோகன்ராஜ்க்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com